பரீட்சையில் மாணவருக்கு உதவிய ஆசிரியர்கள்!!

506

1 (41)

பள்ளித் தேர்வின் போது மாணவருக்கு செல்போனில் விடை அனுப்பிய 3 ஆசிரியர்களை பொலிசார் கைது செய்தனர்.ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார்.

தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டார்.அப்போது அவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த மாணவரின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் வந்த வண்ணம் இருந்தன.

குறுஞ்செய்திகளில் அன்றைய தேர்வுக்கான விடைகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் அளித்துள்ளார்.பின்னர் இது தொடர்பாக பொலிசாரிடன் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவருக்கு விடைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பியது யார், மிஸ்டு கால் அழைப்புகளை விடுத்தது யார்? என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர்.



அப்போது சந்தோஷ்பூர் பஞ்சாயத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திர பொலாய், கஞ்சாம் பாரதி வித்யாபீட பள்ளி உதவி ஆசிரியர் பன்சிதாரா பிஸ்வால், ரவுலிபந்தா தொடக்கப்பள்ளி ஆசிரியர் நாபா பத்ரா ஆகியோர் மாணவருக்கு உதவி செய்தது தெரியவந்தது.இதையடுத்து 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.