
ஐந்து வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் 78 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக ஹிதோகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;
ஹிதோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்மில்லகுளம் கிராமத்திலுள்ள பௌத்த விகாரையில் அண்மையில் சிரமதானமொன்று இடம்பெற்றது. இச் சிரமதானத்தில் கலந்து கொள்ளச் சென்ற தாய் தன்னுடன் 5 வயது மகளையும் கூட்டிச் சென்றுள்ளார். சிறுமியை விளையாடுமாறு கூறிவிட்டு விகாரை வளவினுள் இடம்பெற்ற சிரமதானப் பணியில் குறித்த தாய் ஈடுபட்டுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில் சிறுமியை ஏமாற்றி கூட்டிச் சென்ற சந்தேகநபர் புத்தர் சிலை வைக்கப்பட்ட பகுதியில் வைத்து சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார். சிரமதானம் முடிவுற்றதும் இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளதுடன் குறித்த குற்றத்தைச் செய்த நபரையும் இனங்காட்டியுள்ளார். உடன் ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் தாய் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.





