
நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவர் ஒருவர் 2 பேருந்துகளுக்கு இடையில் சிக்கி பலியாகியுள்ளார்.நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.பொலிசார் இதுபற்றி கூறுகையில், நேற்று இரவு 8.30 மணியளவில் வடசேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு பேருந்து ஒன்று அண்ணா பேருந்து நிலையத்துக்குள் வந்தது.அந்த பேருந்து, நிலையத்துக்குள் நுழைந்தபோது ஒரு வாலிபர் பேருந்தில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.
அப்போது பேருந்து நிலையத்தில் 1-வது நடைமேடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்கும், கன்னியாகுமரி சென்ற பேருந்துக்கும் இடையில் வாலிபர் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார்.இதனை அறிந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பேருந்துகளின் இடையில் சிக்கிய வாலிபர், நசுங்கியபடி உயிருக்காக போராடிய நிலையில், நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர்.அவர்கள் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் அந்த வாலிபரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.இதுபற்றிய தகவல் அறிந்த பொலிசார் விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் வைத்திருந்த சோதனையிட்டதில், அவர் தடிக்காரன்கோணம் பால்குளத்தை சேர்ந்த மோகன் மகன் அனில்குமார்(22) என்பது தெரியவந்துள்ளது.





