மார்ச் 13ம் திகதி தேசிய துக்க தினம்!!

418

1943760925Untitled-1

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது.

கீழே விழுந்த நிலையில் சுயநினைவை இழந்த கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், நேற்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், நேற்று மாலை அவர் இறைபாதம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதிக் கிரியைகளை எதிர்வரும் 13ம் திகதி பிற்பகல் 02.30க்கு கண்டியிலுள்ள பொலிஸ் விளையாட்டரங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.