
தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். அதோடு இவர் நடித்த படங்கள் சிலவற்றையும் யாராலும் முடியாது. இந்நிலையில், சேரனின் சி2எச் நிறுவனத்தின் மீது இராமநாதபுரம் மாவட்ட வினியோகஸ்தர் பழனியப்பன் செக் மோசடி வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.
செக் மோசடி வழக்கில் சேரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இராமநாதபுரம் நீதிமன்ற நீதிபதி வேலுச்சாமி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.





