3 வார குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் கருக்கள்: திகைப்பில் மருத்துவர்கள்!!

293

foetus-main-new

பீஜிங் நாட்டில் 3 வார குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டை கருக்குள் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பீஜிங் நாட்டின், ஹாங் காங் நகரிலுள்ள பிரபல ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஒரு சீனத் தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தையின் வயிற்றுக்குள் இரட்டைக் கருக்கள் இருந்தது.

அந்த கருக்கள் 8 முதல் 10 வாரங்களாக சூல் கொண்டிருந்ததை அறிந்த மருத்துவர்கள்,அந்த கருக்களை நெருக்கமாக ஆய்வு செய்தபோது அவற்றுக்கு கால்கள், கைகள், ஒரு முதுகு, விலா மற்றும் குடல், தொப்புள் கொடி போன்ற முக்கிய உறுப்புகள் உருவாகி இருந்ததும், தோலால் மூடப்பட்ட அந்த இரண்டு கருக்கள் 14.2 மற்றும் 9.3 கிராம் எடை கொண்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹொங்கொங் நகரில் உள்ள சீனப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், அந்நாட்டின் மகப்பேறியல் துறையியலின் பிரபல மருத்துவருமான டாக்டர் யு கேய்-மேன் இந்த அதிசயம் தொடர்பாக கூறுகையில், அந்தக் குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு மிகவும் சிறியதாக இருந்ததால் அந்த தாய்க்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது அந்த குழந்தையின் வயிற்றுக்குள் கருப்பை இருந்ததையும், அவற்றுக்குள் இரு கருக்கள் வளர்ந்திருந்ததையும் கண்டறிய இயலாமல் போனது.

கருவுக்குள் வளரும் குழந்தைக்கு தானாக கர்ப்பம் தரிப்பது என்பது நடக்க இயலாத காரியம். எனினும், இந்த குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கரு உருவாக காரணமாக ஒன்றை கருத முடிகின்றது.அந்த குழந்தை தனது தாயின் வயிற்றில் தரித்த பின்னர், அந்த குழந்தையின் பெற்றோர், தாம்பத்திய உறவில் ஈடுபட்ட வேளையில் தந்தையின் விந்தணுக்களானது, தாயின் வயிற்றில் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்த அந்த பெண் குழந்தையின் கருவறைக்குள் நீந்தி சென்றதால் இந்த விளைவு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.இதற்கு முன்னதாக குழந்தையின் தாய் பலமுறை கருக்கலைப்பு செய்ததும் இதற்கான மற்றொரு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.