வவுனியா வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்!!

665

 
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகதிகளில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்று (10.03.2016) வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் சமூகமட்ட அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மகளிர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தொழில் வாய்ப்புகளை தேடும் இளைஞர் யுவதிகளுக்கு விளையாட்டு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அதனூடாக தொழிலின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் திருமண பதிவுகளும் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை பிரதேச மகளிர் தினமும் அனுஸ்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன், பிரதேச சயெலக ஊழியர்கள், அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊழியர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

DSC07824 DSC07825 DSC07826 DSC07827 DSC07828 DSC07829 DSC07830 DSC07831 DSC07832 DSC07833 DSC07835 DSC07836 DSC07837 DSC07838 DSC07839 DSC07844 DSC07845 DSC07846