வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் சித்திரை விளையாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

578

SP

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகமும் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் சித்திரை வருடப்பிறப்பு விளையாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

32 வருடமாக இவ்வருடமும் நடாத்தப்படவுள்ள விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 60 மைல் சைக்கிள் ஓட்டம், கழகங்களுக்கிடையிலான கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமியர்கள் இளைஞர்கள், பெண்கள், முதியவர்களுக்கான பலதரப்பட்ட போட்டிகளும் அணிக்கு நான்குபேர் கொண்ட வரையறுக்குட்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகளும் இடம்பெறவுள்ளது.

எனவே போட்டியில் பங்குபற்ற விரும்பும் வட மாகாணத்திற்குட்பட்ட விளையாட்டுக்கழகங்கள் வவுனியா மன்னார் வீதியில் உள்ள கலைமகள் விளையாட்டுக்கழகத்தின் நிர்வாகிகளுடனோ அல்லது 0776453739, 0776031512, 0776313658, 0777363175 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்வதுடன் மேலதிக தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.