கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற சோனாக்‌ஷி சின்ஹா!!

422

Sonakshi

பிரபல பொலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. தற்போது பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஒரே நேரத்தில் பல பெண்கள் சேர்ந்து நகங்களுக்கு வர்ணம் போட்டுக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்டது.

இந்த சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் அதிகளவு கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக சோனாக்‌ஷி சின்ஹா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரது பெயர்களும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து சோனாக்‌ஷி சின்ஹா கூறுகையில், ‘‘கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்று எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே ஆசை. அந்த ஆசை தற்போது நிறைவேறியிருக்கிறது’’ என்றார்.

Sonakshi1 Sonakshi2