
உத்தரபிரதேசத்தில் திருமண நாளை கொண்டாட கணவர் விடுமுறை எடுக்காத வருத்தத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பூனம் பால், இவரது கணவர் பிரஜேஷ் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்களது முதலாம் ஆண்டு திருமண நாள் சமீபத்தில் வந்துள்ளது. இதனை கொண்டாடுவதற்காக ஒருநாள் விடுமுறை எடுக்கும்படி கணவரிடம் பூனம் கூறியுள்ளார்.இதனால் சம்பவத்தன்று வீட்டிற்கு சீக்கிரம் வந்து விடுவேன் என கூறி விட்டு பிரஜேஷ் பணிக்கு சென்றுள்ளார்.
ஆனால் வழக்கம் போலவே அலுவலகம் முடிந்து பிரஜேஷ் வீட்டிற்கு வந்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது.பிரஜேஷின் தாயார் காய்கறி வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ள நிலையில், வீட்டில் முதல் தளத்தில் பூனம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுபற்றி தனது குடும்ப உறுப்பினர்களிடம் பூனம் தகவல் தெரிவித்துள்ளார், அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.அவரது குடும்பத்தினர் ஒருவர் மீதும் புகார் அளிக்கவில்லை என்பதால் அவரது உறவினர்கள் யாரிடமும் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.





