
துருக்கிய இஸ்தான்புல் நகரிலிருந்து பிரான்ஸின் பாரிஸ் நகரை நோக்கிப் பயணித்த எயார் பிரான்ஸ் விமானத்தில் பெண்ணொருவர் தனது கைப்பையில் ஒரு வயது குழந்தையை மறைத்து வைத்து எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் சார்ள்ஸ் டி கோலி சர்வதேச விமான நிலையத்தை மேற்படி விமானம் நெருங்கிய சமயத்தில் குறிப்பிட்ட பெண் தனது அளவில் பெரிய கைப்பையை திறக்க முயற்சித்த போது, அதற்குள் ஏதோ அசைவதைக் கண்டு சந்தேகம் கொண்ட அவரது ஆசனத்துக்கு அருகில் இருந்தவர் செய்த முறைப்பாட்டையடுத்து விமான உத்தியோகத்தர்கள் அவரது கைப்பையை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது அதற்குள் குழந்தையொன்று இருப்பதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அந்தப் பெண் மேற்படி குழந்தையை விமானத்தில் அழைத்துவருவதற்கு விமான பயணச்சீட்டு எதனையும் அவர் பெற்றிருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர் பில் பிரான்ஸ் அதிகாரிகள் தீவிர விசார ணைகளை மேற்கொண்டுள்ளனர்.





