
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆளற்ற விமானங்க ளைப் பயன்படுத்துவ தற்கு தமக்கு வசதியில்லாததால் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட சிறுவர்களுக்கான வாயு பலூன் களை தமது கண்காணி ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது அறியப்பட்டுள்ளது.
தமது பிராந்தியத்தில் கண்ணைக் கவரும் வடிவமைப்பிலான பலூன் கள் வானில் பறப்பதைக் கண்டு சந்தேகம் கொண்ட குர்திஷ் பெஷ்மெர்கா படையினர், அந்த பலூன்களில் ஒன்றை சுட்டு வீழ்த்திய போது அதனுடன் புகைப்படக்கருவியொன்று பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாதிகள் இத்தனை மலி வான தொழில்நுட்பமுறைமையொன்றைப் பயன்படுத்தி தம்மை கண்காணிப்பார்கள் என்பதை தாம் சிறிதும் எதிர்பார்த்திருக்கவி ல்லை என அந்தப் படையினர் கூறுகின்றனர்.





