மின்தடை குறித்து ஆராய ஜனாதிபதியால் குழு நியமனம்!!

503

Maithiri

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய விரைவான நடவடிக்கைகள் குறித்து ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இந்தக் குழுவில் அடங்குவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக ரஞ்சித் சியாம்பலாபிடிய, சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேமஜயந்த, சாகல ரத்னாயக்க ஆகிய அமைச்சர்களும், இரான் விக்ரமசிங்க, அஜித் பீ பெரேரா ஆகிய பிரதியமைச்சர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்தக் குழுவின் முதல் அறிக்கையை ஒரு வாரத்துக்குள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.