
உலகக்கிண்ண டி20 போட்டிகளில் இலங்கை கிரிக்கட் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ஹபீஸ் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா 2 விக்கட்டுக்கள் வீழ்த்தினார்
158 ஓட்டங்கள் எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.





