மதுபோதையில் பிரசவம் பார்த்த பெண் மருத்துவர்: பரிதாபமாக உயிரிழந்த தாயார்!!

482

surgery

பிரான்ஸ் நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவிட்டு மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்தபோது நிகழ்ந்த கவனக்குறைவால் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தென் மேற்கு பிரான்ஸில் உள்ள Bayonne நகரில் Kappa Clinic என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த மருத்துவமனைக்கு பிரித்தானிய நாட்டை சேர்ந்த Xynthia Hawke என்ற பெண்மணி பிரசவத்திற்காக கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி சென்றுள்ளார்.இந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணிபுரிந்து வந்த Helga Wauters என்ற பெண் மருத்துவர் தான் இவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.சுகப்பிரசவம் வாய்ப்பு இல்லாததால், அவருக்கு அறுவை சிகிச்சை(சிசேரியன்) மூலம் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து சில தினங்களாக தாயார் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஒரு பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.பிரசவத்திற்கு வந்த தாயாரின் வழக்கறிஞர் பேசியபோது, ‘சிசேசிரியன் சிகிச்சையை முடித்த பிறகு, அந்த பெண் மருத்துவர் தன்னுடைய சக மருத்துவர்களுடன் ‘வோட்கா’ எனப்படும் மதுவை அருந்த சென்றுள்ளார்.

மது அருந்திய பிறகு, தாயாரிடம் திரும்பி வந்து அவருக்கு மயக்க மருந்தும், மூச்சு விட சிரமமாக இருந்ததால் ஆக்ஸிசன் குழாயையும் பொருத்த வந்துள்ளார்.ஆனால், மயக்க மருந்தை செலுத்தியபோதே அவருடைய கை நடுங்கியுள்ளது. பின்னர், ஆக்ஸிசன் குழாயை பொருத்த அவர் மிகவும் தடுமாறியுள்ளார்.

இதனை தாயார் கவனித்தது மட்டுமின்றி மருத்துவரிடமிருந்து மது வாசனை வருவதையும் அவர் உணர்ந்துள்ளார்.இந்நிலையில் தடுமாற்ற நிலையில் இருந்த அந்த மருத்துவர், ஆக்ஸிசன் குழாயை மூச்சு காற்று செல்லும் குழாயில் பொருத்துவதற்கு பதிலாக உணவு செல்லும் குழாயில் தவறதலாக பொருத்திவிட்டு சென்றுள்ளார்.

இதனால், மூச்சு விடமால் தவித்த அந்த தாயார் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்து, பெண் மருத்துவரை உடனடியாக சோதனை செய்தபோது அவரது ரத்தத்தில் 2.16 கிராம் அளவு மது கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பெண் மருத்துவர் மீதும் இவருக்கு உதவியதாக மற்றொரு மருத்துவர் மீதும் கொலை வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.சில தினங்களுக்கு நீதிமன்றத்தில் பெண் மருத்துவர் வாக்குமூலம் அளித்தபோது, ‘நான் மது அருந்திருந்தது உண்மை தான். ஆனால், போதையில் இருந்தாலும் என்னுடைய பணியில் 70 சதவிகிதம் கவனமாக இருந்தேன்.

சில நேரங்களில் மருத்துவம் பார்ப்பதற்கு எனக்கு மது தேவையாக உள்ளது. இல்லையெனில் எனது கைகள் நடுங்க ஆரம்பித்து விடும்’ என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தற்போது இரு மருத்துவர்கள் மீதான விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.