வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் முகம்மட் சியாட் அஸ்பா 9A சித்தி!!

588

20160321_084045

வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவன் முகம்மட் சியாட் அஸ்பா 9A சித்தியினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் அப்துல் றகீம் முகம்மது பஸாரத் 8A,C சித்திகளைப் பெற்றுள்ளார். இப் பாடசாலையில் இருந்து 53 பேர் பரீட்சைக்கு தோற்றியிருந்ததுடன் பெரும்பாலான மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.