வவுனியாவில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது : குளத்திலிருந்து பொருட்கள் மீட்பு!!

857

 
வவுனியாவில் இடம்பெற்ற இருவேறு கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வவுனியா, ஹொரவப்பொத்தானை பகுதியில் உள்ள பிரபல தளபாட விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து ஒரு தொகை பணம், சீசீடிவி கமராவின் சேவர் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கொள்ளையிடப்பட்டன.

அதேபோன்று கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா வேப்பங்குளம் பகுதியில் ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் மற்றும் சீசீடிவி கமராவின் சேவர், ஆவணப்பதிவு (மெமறிசிப்) உள்ளிட்ட முக்கிய பகுதிகளும் கொள்ளையிடப்பட்டன.

இது தொடர்பாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து சீசீடிவி கமராவின் சேவர் உள்ளிட்ட பகுதிகள் பண்டாரிகுளம் குளத்தில் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

1 2