
கைதிகளுக்கு வசதியாக பயன்படுத்தக் கூடிய வகையிலான மெத்தைகளை பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகள் தூங்குவதற்காக தற்போது பாய்களே வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்காக மெத்தைகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அந்தத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட மெத்தைகளையே கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த மெத்தைகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தாலேயே தயாரிக்கவும், இதன் முதல் கட்ட நடவடிக்கையை கொழும்பு வெலிகடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் பாய்களுக்கு பதிலாக மெத்தையையே பெற்றுக் கொடுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.





