தமிழகத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கை அகதி!!

564

hunger-strike

தமிழகத்தில் அகதி முகாம் ஒன்றில் வசிக்கும் கே.தயாபரராஜ் என்ற இலங்கை அகதி சாகும் வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை முதல் இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இராமநாதபுரம், மண்டபம் முகாமில் தமது குடும்பம் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை ஆட்சேபித்தே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

தமது மனைவியான உதயகலாவும் மூன்று பிள்ளைகளும் மண்டபம் முகாமில் உரிய பணவசதிகள் இன்றி உறவினர்களை பார்க்க முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மனைவியின் உடல்நிலையை கவனிக்கும் அதிகாரிகள் அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு தாம் படகு மூலம் தமிழகம் வந்ததும் கியூ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமது குடும்பத்தினர் மீது கடவுச்சீட்டு மீறல் குற்றம் சுமத்தப்பட்டு அதற்காக நீதிமன்றம் ஒருவருட சிறைத்தண்டனையை விதித்தது.

எனினும் இந்த தண்டனை முடிவடைந்த பின்னரும் தாம் திருச்சி முகாமுக்கும் தமது குடும்பம் மண்டபம் முகாமுக்கும் அனுப்பப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை அகதி குறிப்பிட்டுள்ளார்.