முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் விபத்து! குடும்பஸ்தர் பலி!!

512

 
முல்லைத்தீவில் இருந்து நேற்று இரவு 8 மணியளவில் வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று 3ம் கட்டை வளைவுப் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்துக்குள்ளாகியது.
குறித்த விபத்தில் கேப்பாப்பிலவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான செல்லத்துரை விஜியகுமார் (26) என்பவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருடன் வந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருவரும் மது போதையில் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

1 2 3