இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நுளம்பு வகை களுத்துறை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட இடத்தியேயே தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் நுளம்பு குறித்து மேற்கொண்ட பரிசோதனையில் இந்த புதிய நுளம்பு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொரளை வைத்திய பரிசோதனை நிலையத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்தார்.
புதிய நுளம்பு வகை தொடர்பில் அது கண்டறியப்பட்ட பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அப்பிரதேச மக்கள் நுளம்பு கண்டறியப்பட்ட பிரதேசத்தை தீயிட்டு அழித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக எந்தவொரு நுளம்பையும் அப்பிரதேசத்தில் கண்டறியக் கூடிய சாத்தியக் கூறுகள் இல்லை என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பரிசோதனைகளை மேற்கொண்ட குழுவினர் பெரும் சௌகரியத்திற்கு உட்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட அதிகாரி ஒருவர் அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்போது புதிய நுளம்பு குறித்த பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.