நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட சேரன்..கல்லாய் நின்ற மகள் தாமினி!!

756

cheran4

எல்லா வகையிலும் சுதந்திரம் கொடுத்து, பாசம் காட்டி, இன்னாரைக் காதலிப்பதாக மகள் எழுதிய பேஸ்புக் ஸ்டேஸுக்குக் கூட லைக் போட்ட ஒரு தந்தை அத்தனை பெரிய நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுகிறார். அப்படியெல்லாம் வளர்க்கப்பட்ட மகளோ கல்லாய் நிற்கிறார்.

அந்தத் தந்தையைத் திரும்பிப் பார்க்கக் கூட விரும்பாமல் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக் கொள்கிறார். இயக்குநர் சேரன் மற்றும் அவரது மகள் தாமினியை நேற்று நீதிமன்றத்தில் இந்த நிலையில் பார்த்த பார்வையாளர்கள் பெரும்பாலோர் தாமினியைத் திட்டித் தீர்த்தனர்.

வந்திருந்த பார்வையாளர்களில் சிலர் அப்படி என்ன இந்தப் பெண்ணுக்குப் பிடிவாதம் அவர்தான் திருமணம் செய்து தருவதாகச் சொல்கிறாரே அந்தப் பையன் ஒப்புக்குக் கூட நான் செட்டிலாவதற்கு முயற்சிக்கிறேன் என்று கூட சொல்லவில்லையே. ஏதோ சேரனுடன் மல்லுக்கட்டுவது போலத்தானே நிற்கிறான் அவனுக்கு இந்தப் பெண் இந்த அளவு உறுதியான ஆதரவு காட்டும் பின்னணி என்ன என கேள்வி எழுப்பினர்

சட்டம் தாமினிக்கும் சந்துருவுக்கும் சாதகமாக இருந்தாலும் யதார்த்தம் அவர்களுக்கு முற்றிலும் எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக அளவில் மிக வெறுப்புக்குள்ளான ஒரு ஜோடியாகவே இந்த இருவரும் இப்போது பார்க்கப்படும் சூழலை அவர்களே உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

சேரன் சொல்லும் காரணங்களை ஒரு வழக்கமான தந்தையின் மனக் குமுறலாக ஆரம்பத்தில் பார்த்தவர்கள் கூட மகளின் பேஸ்புக் பக்கத்தில் அவள் தன் காதலன் சந்துருவைப் பற்றி வெளிப்படையாக எழுதிய ஒரு ஸ்டேடஸுக்குக் கூட லைக் போட்டிருக்கிறார் என்ற உண்மை தெரிந்த பிறகு வாயடைத்துப் போய்விட்டார்கள்.

பெண்ணுக்கு இத்தனை சாதகமாக ஒரு தோழனைப் போல இருந்த தந்தை எப்படி அவளுக்கு எதிரான முடிவை எடுப்பார். இப்போது தந்தையுடன் அந்தப் பெண் செல்வதே சரி என நீதிமன்ற வளாகத்துக்குள் பலரும் சத்தமாகக் கூறியதைக் கேட்க முடிந்தது.

சேரன் விவகாரத்தை, நீதிபதிகளும் காவல் துறையும் வெறும் சட்டப்பூர்வமாக மட்டும் அணுகவில்லை. அதில் உள்ள யதார்த்த நிலையைக் கருத்தில் கொண்டே விசாரிப்பது இப்போது பலருக்கும் புரிந்துள்ளதுதான் சேரனுக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல்.