வவுனியாவில் பாடசாலை மாணவர்களிடம் மின்சாரத்தை சிக்கனமாகப் பாவிப்பது தொடர்பாக விழிப்புணர்வு!!

523

 
வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று (25.03.2016) பாடசாலை சக்திவள கழகங்களை ஸ்தபித்தலும் இயங்கச் செய்தலும் எனும் தொனிப்பொருளில் மின்வலு மற்றும் மீள் புத்தாக்க சக்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை மின்சார அமைச்சர் ரஞ்சித் சியம்பல பிட்டிய கலந்துகொண்டார்.

பாடசாலை மாணவர்களிடையே சிக்கனமாக மின்சாரத்தை பாவிப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் உரை நிகழ்த்திய சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய..

வாழ்விலே சிக்கனம் என்பது மிக முக்கியமானது. சிக்கனமாக வாழ்வதன் மூலம் மனிதவளத்தை, பௌதிக வளத்தை சிறப்பாக்க முடியும். 2020 ஆம் ஆண்டு 400 மெகா வாட்ஸ் மின்சாரத்தை இந்த நாட்டிற்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது.

ஆகவே இத்திட்டத்தை மாணவர்களினுடாக எடுத்து செல்லவேண்டிய தேவை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சம்பூர் மின்நிலையம் இயங்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம் ஆனால் இது சிக்கலான நடைமுறை சாத்தியமற்றதாக இருக்கிறது.

கடந்த வாரம் பேசும் பொருளாக இருந்தது என்னுடைய அமைச்சின் விவகாரம் நீர் மின் உற்பத்தியானது 50 வீதத்திற்கு மேற்கொள்ளப்படுகிறது கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் காரணமாக நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. நீரை மையமாக வைத்து பார்க்கும் போது முதலாவது குடிநீருக்கும் இரண்டாவது விவசாயத்திற்கும் மூன்றாவதாக மின் உற்பத்திக்கும் பயன் படுத்தப்படுகின்றது. ஆகவே நீரை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

P1190931 P1190933 P1190935 P1190937 P1190938 P1190941 P1190943 P1190945 P1190946 P1190947 P1190957 P1190958 P1190960 P1190961