மன்னாரில் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் 1 கிராம் 276 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று ஒருவர் கைதானார்.
இவர் எருக்கலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் நேற்றையதினம் மன்னார் நகரில் ஒரு கிலோ 905 கிராம் கஞ்சாவுடன் 41 வயதான நபரொருவர் கைதுசெய்யப்பட்டார்.
இரண்டு சந்தேகநபர்களும் இன்றையதினம் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.