12 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குடும்பஸ்தர் கைது!

430

Abuse

பொகவந்தலாவ பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்த 35 வயது குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்த வேளை, நேற்று பிற்பகல் தனது வீட்டில் குறித்த சிறுமி தனிமையில் இருந்ததை அறிந்து கொண்ட குடும்பஸ்தர் அவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது, சிறுமி அலரி அடித்துக் கொண்டு வெளியே ஒடியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



நேற்று (26.03) மாலை சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபர் இன்று (27.03) ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தப்படவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.