திருகோணமலை – மொறவெவ பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (26.03) கைதான குறித்த சந்தேகநபரை அடுத்த மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.
சந்தேகநபர் மொறவெவ, கம்பங்கோட்ட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் எனவும், தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கே இவ்வாறு அநீதி இழைத்துள்ளதாகவும், தெரியவந்துள்ளது.
குறித்து சிறுமியின் தாயாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.