வானில் எரிந்து போன மர்மபொருள் : பறக்கும் தட்டாக இருக்குமோ என்ற பீதியில் மக்கள்!!

280


Capture

மர்மமான பறக்கும் பொருள் ஒன்று வானில் இரண்டு நிமிடங்களில் முற்றாக எரிந்து போன சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.ரஷ்ய ஜனாதிபதியின் சொந்த நகரமான சென்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரின் வான் பரப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மர்மமான பறக்கும் பொருள் எரிவதை Vyacheslav Golovkin என்பவர் கடந்த 22 ஆம் திகதி தனது கமராவில் பதிவு செய்துள்ளார்.

கடலுக்கு மேல் உள்ள வானில் எரியும் மூன்று வெளிச்சங்களை காணக் கூடியதாக உள்ளது. எரியும் பொருளானது சாதாரண விமானம் இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இது சாதாரணமான ஒரு விமானம் அல்ல என்பதை மட்டும் உணர முடிகிறது. ஒருவேளை இது பறக்கும் தட்டாக இருக்குமோ?