வன்னி மன்னின் ஏற்றமிகு வவுனியா நன்னகரின் தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள அற்புத ஐயனார் ஆலய மகா கும்பாபிசேக பெருவிழா நிகழும் மங்கள கரமான மன்மத வருடம் பங்குனி மாதம் 21ம் நாள் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியும் திருவோண நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய சுபதினத்தில் பூரணை புட்கலை சமேதே ஐயனார் மற்றும் பரிவார நூதன மூர்த்திகளுக்கும் காலை 08மணி 45நிமிடம் வரையுள்ள இடப லக்கின சுபமுகூர்த்தத்தில் மகாகும்பாபிசேக பெரும் சாந்திவிழாவும் கிரியைகளும்நடைபெறும்.
இவ் அற்புத ஐயனார் கோவில் மூலவரின் கண்களில் இருந்து 19.08.2001 ஆவணி முதல் ஞாயிறு அன்று மூலவரின் கண்கள்அகல விரிந்து காணப்பட்டதுடன் கண்களில் இருந்து கண்ணீரும் வடிந்த அதிசியம் நிகழ்ந்ததும் நோய், பிணிகளை நீக்கும் கோவில் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.



