கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!!

439

Aswin1

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் தன்னை விமர்சித்த இலங்கை ரசிகருக்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் பதிலளித்துள்ளார்.

டுவிட்டரில் அஸ்வினுடன் ரசிகர்கள் அடிக்கடி சீண்டி வருவதும், அவர் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இலங்கை ரசிகர் ஒருவர் அஸ்வினிடம், “நீங்கள் அவுஸ்திரேலியாவை வீழ்த்திவிட்டால் நான் கிரிக்கெட் பார்ப்பதை விட்டுவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அஸ்வின், “உனக்கு கிரிக்கெட் பார்ப்பதை விட அதிக வேலைகள் இருக்கும். இது உனது குடும்பத்திற்கும் நல்லது தான். வாழ்த்துக்கள்” என்று பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அதே இலங்கை ரசிகர் மீண்டும் அஸ்வினுடன் தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டார்.

அந்த இலங்கை ரசிகர் “கடைசியாக சிரித்துக் கொள்ளுங்கள், எனது நண்பர் கெய்ல் உங்கள் அனைவரையும் புரட்டி எடுக்கப் போகிறார், அரையிறுதியில் விளையாடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது” என்று கிண்டலடித்தார்.

இதற்கு அஸ்வின், “நீ இன்னுமா கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கிறாய், உன்னிடம் பேசினது எனது தவறு தான்” என்று பதிலளித்தார்.

அதற்கு அந்த ரசிகர், “நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் கெய்லுக்காக நாளை நான் போட்டியை பார்க்கப் போகிறேன். இந்திய வீரர்களின் தோல்வி முகத்தை பார்க்க எனக்கு பிடிக்கும்” என்றார்.

இப்படி வாக்குவாதம் முற்றிய நிலையில் அஸ்வின், “நாய் பிடிக்கும் வண்டி வரட்டும் உன்ன‌ புடிச்சு கொடுக்குறேன். நாளைக்கு என்ன நடந்தாலும் எனக்கு கவல இல்ல“ என்று தமிழில் மிகவும் அநாகரிகமான முறையில் பதிலளித்துள்ளார்.

கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் டுவிட்டரில் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நாகரிகமான முறையில் பதிலளித்து வருகின்றனர்.

ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாகரிகமான முறையில் பதிலளிப்பது மட்டுமன்றி ரசிகர்கள் முறையற்ற கேள்விகளை கேட்கும் பட்சத்தில் அதற்கு மிகவும் மிகவும் நாகரீகமாக பதிலளித்து தமது கண்ணியத்தை காப்பாற்றி வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவரும் ஒரே ஒரு தமிழ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பதுடன், இவர் தமிழில் அநாகரிகமான பதிலளித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்துள்ளது.

கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டாகும். இக் கிரிக்கெட்டை விளையாடும் வீரர்கள் சமூக வலைத்தளங்களிலும் கனவான்களாக நடந்துகொள்ளவேண்டியது மிக முக்கியமானதாகும்.

Aswin