சிறுநீரக வியாபாரம்: இந்தியப் பிரஜைகளிடம் ஆவணங்கள் மீட்பு!!

1199

surgical-operation-20755879

இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகள் வெளியாகிவரும் நிலையில் தற்போது உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனடிப்படையில், சந்தேகத்தின் பேரில் அண்மையில் கொழும்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகளிடம் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இருந்து இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் கடிதங்கள் என்பன எவ்வாறு சந்தேக நபர்களிடம் வந்தது என்பது தொடர்பாகவும், ஆவணங்களின் உண்மை தன்மை தொடர்பாகவும் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 இந்திய பிரஜைகளில் 6 நபர்களின் சிறுநீரகங்கள் நீக்கப்பட்டிருந்தாகவும் சட்ட வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.