திருமணத்திற்காக விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்!!

848

techie_hospital_002

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதற்காக இளைஞர் ஒருவர் விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 24 வயதான நிகில் ரெட்டி. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு தாம் குள்ளமாக இருப்பதாக கவலையில் இருந்து வந்தார்.

இதனாலேயே இவருக்கு பெண் கிடைக்கவில்லை எனவும் இவர் பெரிதும் கவலைப்பட்டு வந்துள்ளார்.இதனால் தனது உயரத்தை அதிகரிக்கும் நோக்கில் அறுவை சிகிச்சை செய்ய அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சேர்ந்துள்ளார்.இந்த நிலையில் மகனை தொடர்ந்து 3 நாட்களாக காணாத பெற்றோர் ஐதராபாத் பொலிசாரிடம் மகனை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே நிகில் ரெட்டியின் அலைப்பேசி சிக்னலை வைத்து அவர் மருத்துவமனையில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.இத்தகவலை அறிந்த நிகிலின் பெற்றோர் அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருந்த அவரை பார்த்து மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், நிகில் சிகிச்சை தொடர்பாக கடந்த 6 மாதகாலமாக தனியாகவே வந்து மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிகில் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.