நாய் வளர்ப்பாளர்களுக்கு புதிய சட்டம்!!

318

1019707147Dog

நாய்களுக்கு மைக்ரோசிப் எனப்படும் நுண்சில்லு ஒன்றை பொருத்த தவறும் உரிமையாளர்கள் மீது அபாராதம் விதிக்கப்படும் என்ற சட்டம் விரைவில் பிரிட்டனில் அமலுக்கு வருகிறது.500 பிரிட்டிஷ் பவுண்டுகள் வரை இதற்கு அபராதம் விதிக்கப்படும். 15 எண்களைக் கொண்ட தனிப்பட்ட குறியீடு பொறிக்கப்பட்ட ஒரு நெல் மணியின் அளவிலான மைக்ரோசிப் ஒன்று, நாயின் கழுத்துக்கு பின்புறமாக தோலின் கீழ்பகுதியில் வைக்கப்படும்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் வளர்க்கப்படும் நாய்கள் அனைத்திற்கும், பிறந்து 8 வாரங்களுக்குள் மைக்ரோசிப் பொருத்தப்பட வேண்டும். வடக்கு அயர்லாந்தில் இது 2012ஆம் ஆண்டு முதல் சட்டமாக உள்ளது.இது தவறவிடப்பட்ட அல்லது காணாமல் போன நாய்களை மீண்டும் அவற்றின் உரிமையாளர்களுடன் சேர்த்து வைக்க உதவுகிறது. நாயின் பிடரிப் பகுதியை ஸ்கேன் செய்யும்போது, அதிலிருந்து பெறப்படும் தரவுகளைக் கொண்டு தரவுத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அந்த நாயின் உரிமையாளரை கண்டுபிடிக்க முடியும்.

பிரிட்டனில் உள்ள மொத்த நாய்களில் கிட்டத்தட்ட 8இல் ஒரு நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படவில்லை எனவும், அவ்வாறு 10 இலட்சம் நாய்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத் தகவல் தெரிவிக்கிறது.மைக்ரோசிப் பொருத்தப்படாத நாய்கள் இனங்காணப்பட்டால், அதனைப் பொருத்துவதற்கு 21 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் எனவும், தவறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சில உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள், மிருக வைத்தியர்கள், மற்றும் டாக்ஸ் ட்ரஸ்ட் போன்ற அறக்கட்டளைகளும் இலவசமாக இந்த சேவையை வழங்குகின்றன.