கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி!!

284

teeth_prisoner_002

அமெரிக்காவில் தாங்க முடியாத பல் வலியால் அவதிப்பட்டு வந்த சிறைக்கைதி ஒருவர், தனக்கு சிகிக்சை கிடைக்காத காரணத்தால் தனக்கு தானே வைத்தியம் பார்த்துகொண்டார்.அமெரிக்காவின் நிவோத மாகாணத்தில் உள்ள High Desert State என்ற சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் Michael Sanzo(47) என்ற கைதி, தாங்க முடியாத பல்வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அக்கைதி சிறை அதிகாரிகளிடம், வலி அதிகமாக இருப்பதால் என்னால் இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை, மேலும் பசித்தாலும் சரியாக சாப்பிடமுடியவிலை, நாளுக்கு நாள் மிக மோசமான வலியை சந்தித்துக்கொண்டிருக்கும் எனக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

ஆனால், சிறைக்கைதிகள் தங்களுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றால் அதற்காக சிறையில் வழங்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்தி அதிகாரிகளிடம் கொடுக்கப்படும், அதன்படியே Michael – ம் கொடுத்துள்ளார், ஆனால் அவரின் படிவம் நிராகரிக்கப்பட்டது.

பின்னர் 8 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டும் அதிகாரிகளை அணுகியபோது, சிகிச்சையளிக்கவிருக்கும் பட்டியலில் உங்கள் பெயர் வரவில்லை, உங்கள் பெயர் எப்போது வருகிறதோ, அப்போது நாங்கள் உங்களை பார்க்கிறோம் என கூறியுள்ளனர்.இதனால், வலியை பொறுத்துக்கொள்ள முடியாத அவர், தனது முகத்தின் பக்கவாட்டில் குத்துவிட்டு தனக்கு வலியை ஏற்படுத்திக்கொண்டிருந்த 6 பற்களையும் வெளியே எடுத்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு தானே வைத்தியம் பார்த்துக்கொண்டதால், தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்றும் அதனால் தனக்கு நஷ்டஈடாக $1,000,000, வழங்கவேண்டும் என இவரது சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இதனை விசாரித்த நீதிமன்றம், இக்கைதிக்கு £42,000 இழப்பீடாக வழங்கியுள்ளது.