முட்டையின் விலை அதிகரிப்பு!!

519

Eggs

முட்டையின் விலை உள்நாட்டு சந்தையில் உயர்வடைந்துள்ளதாக கோழி பண்ணையின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடுபூராகவும் முட்டை உற்பத்தி முப்பது சதவீதத்தினால் சரிந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை காரணமாகவே பல வருடங்களின் பின்னர் இந்த வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டையின் விலை அதிகரித்துள்ளமையின் காரணமாக முட்டையினால் தயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளின் விலைகள் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.