வித்தியா குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இந்தியா!!

470

vithya_home_004

புங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு வவுனியாவில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடு இந்திய அரசின் நிதியுதவியினால் கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாயாரை ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் சந்தித்திருந்த போது தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கருதி வவுனியாவில் வீடொன்றை பெற்றுத்தருமாறு கோரியிருந்தார்.

இதனையடுத்து, வவுனியா, குருமன்காடு, சிங்கள பிரதேச செயலக வீதியில் வீடு அமைக்கப்பட்டு கடந்த 3ஆம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவினால் வித்தியா குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.இந்நிலையில், குறித்த வீட்டினை இலங்கை அரசாங்கமே நிர்மாணித்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த வீட்டினை நிர்மாணிப்பதற்கான முழுமையாக நிதி உதவியினை இந்திய மத்தியரசு வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், கட்டுமானப் பணிகளுக்கான சரீர உதவிகளை இராணுவத்தினர் வழங்கியுள்ளனரே தவிர இலங்கை இராணுவத்தினரால் வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை எனயாழ். இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.