
பலாங்கொடை, கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 134 வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளுடன் மேலும் பல பெறுமதியான மரக்கட்டைகளும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.





