பிரஸெல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது!!

567

Mohommad-Abrini

பிரான்ஸின் பிரஸெல்ஸ் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபர் பெல்ஜிய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்ரினி என்றழைக்கப்படும் 31 வயதான மொராக்கோ வம்சாவழியைச் சேர்ந்த பெல்ஜிய நாட்டு பிரஜையே பெல்ஜிய பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பெல்ஜிய ஊடகத்தை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

சந்தேகநபர் சமீபத்தில் நடத்தப்பட்ட பிரஸெல்ஸ் பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரஸெல்ஸ் விமான நிலைய பாதுகாப்பு cctv கமராவில் பதிவாகிய தொப்பி அணிந்திருந்த அந்த சந்தேகநபர் இவராக இருக்க கூடுமென சந்தேகிப்பதாக பெல்ஜிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வரையில் பிரஸெல்ஸ் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மாத்திரம் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பெல்ஜிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.