
இராஜாங்கனையில் மின்குமிழை உட்கொள்ள முயற்சித்த 13 வயது சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த பகுதியில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியொன்றில் மின்குமிழை உட்கொள்வது போன்ற காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை நண்பர்களுக்கு விளக்குவதற்கு முயற்சித்த வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயங்களுக்குள்ளான சிறுவனை நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைகளுக்காக சிறுவன் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.
இதேவேளை இவ்வாறான கண்காட்சிகள் தொடர்பில் பிள்ளைகளை தெளிவுப்படுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும் என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் ஞானதாச பெரேரா தெரிவித்துள்ளார்.
15 முதல் 17 வயது வரையான பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கவனம் செலுத்துதல் அவசியம் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





