கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் அழகு குறிப்புகள்!!

315

f

கோடைகாலத்தில் சரும நிறத்தை பாதுகாக்க பழங்களை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தி கருமையை போக்கலாம்.சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுவது நல்லது.

* கோடையில் மாம்பழம் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாம்பழத்தின் கூழ் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கோல்ட் க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து நன்கு கலந்து, முகம், கை, கால்களுக்கு தடவி உலர்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் கோடையில் சருமத்தின் நீர்ச்சத்தை தக்க வைக்கலாம்.

* கோடையில் தர்பூசணியை வாங்கிச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். உங்கள் வீட்டில் தர்பூசணி இருந்தால், 1/2 கப் தர்பூசணி கூழ் உடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தினமும் தடவி வந்தால், வெயிலால் ஏற்பட்ட கருமையைப் போக்கலாம்.

* கிவி பழத்தில் விற்றமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தின் தரத்தை மேம்படுத்தும். ஒரு பௌலில் 1/2 கப் கிவி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பால், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக் மென்மையான சருமத்தினருக்கு ஏற்றது.

* தயிர் சரும நிறத்தை அதிகரிக்க உதவும். அத்தகைய தயிரை கோடையில் வாரத்திற்கு இரண்டு முறை கை, கால், முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவினால், சருமத்துளைகள் சுத்தமாகி, சரும பொலிவு மேம்படும்.

* வெள்ளரிக்காயும் கோடையில் அதிகம் கிடைக்கும். அத்தகைய வெள்ளரிக்காயை ஒன்று வாங்கி அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த பால் கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சிப் பெறும்.

* ஒரு அன்னாசி பழத் துண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும் ரோஸ் வாட்டர் கொண்டு துடைத்து, பின் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும எரிச்சல் தடுக்கப்படும்.