விஜயகாந்தின் கட்சி இரண்டாக உடைந்தது : மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சி!!

684

MTMK

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ இன்று மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் சந்திரகுமார் தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சேலம், ஈரோடு, கும்மிடிபூண்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தேமுதிகவினர் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்தகுமார் மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது ஒரு இயக்கமாகவே செயல்படும் என்றும் அரசியல் கட்சியாக செயல்படாது. இந்த இயக்கத்தின் தமிழகம் முழுவதும், தேமுதிகவால் அதிருப்தி அடைந்து மனகுமுறலில் உள்ள உறுப்பினர்கள், நிர்வாகிகளை அரவணைப்பதே இந்த இயக்கத்தின் நோக்கம் என கூறியுள்ளார்.

பிரேமலதா பற்றி குறிப்பிட்ட அவர், அண்ணியாக இருந்த பிரேமலதா, சித்தியாக மாறியதால் தற்போது மக்கள் தேமுதிக தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அ.தி.மு.க. ஆட்சியை அகற்றவே மக்கள் தேமுதிக அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த்தை என்றும் குறை சொல்ல மாட்டோம்.

தே.மு.தி.க.வை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. வைகோவைப் போன்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.திக. இணைந்தது வருத்தமளிக்கிறது என சந்திரகுமார் பேட்டியில் கூறியுள்ளார்.