அட்லாண்டிக் கடலை தனியாக கடக்கும் பிரான்ஸ் குடிமகன்!!

543

extras-29-roz-and-hms-southampton_3118126236_o

சுமார் 5,000 கி.மீ தூரமுள்ள அட்லாண்டிக்கடல் பரப்பை தனியாக கடந்து பிரான்ஸ் குடிமகன் ஒருவர் சாதனை படைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Nicolas Jarossay(38) என்பவர் தீயணைப்பு வீரராகவும் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவாராகவும் விளங்கி வருகிறார்.

இந்நிலையில், அட்லாண்டிக் கடலை தனி ஒருவனாக கடந்த சாதனை படைக்க வேண்டும் என தீர்மானித்த அவர், Cap Verde கடற்கரை ஓரமாக உள்ளPraia என்ற பகுதியில் இருந்து நேற்று புறப்பட்டுள்ளார்.இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், அவர் பயணிக்கும் சிறிய ரக படகில் நின்றுக் கொண்டு தான் பயணிக்க முடியும்.

அதாவது, சுமார் 5,000 கி.மீ தொலைவு உள்ள இந்த தூரத்தை இந்தசிறிய படகில் பயணம் செய்து 2 நாட்களுக்குள் பிரான்ஸில் உள்ள Martinique கரீபிய தீவுக்குள் வந்தடைவார்.7 மீற்றர் நீளமுள்ள இந்த படகு சுமார் 50,000 டொலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படகின் முகப்பு பக்கத்தில் உள்ள 2.2 மீற்றர் நீளமுள்ள பகுதியில்அவர் இரவு நேரங்களில் உறங்கலாம்.

இதுமட்டுமில்லாமல், இந்த படகில் சோலர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், வெளி உலகை தொடர்புக் கொள்ள தேவையான உபரணங்களை சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.இந்த சாதனையை நிறைவு செய்துவிட்டால், அமெரிக்க நாட்டில் உள்ள 3,780 கி.மீ நீளமுள்ள மிசிசிபி நதியை கடந்த Alex Linnell என்பவரின் உலக சாதனையை இவர் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.