
தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த நபர் காதலி வீட்டு முன் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.புனேவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர்.
பின்னர் கார் கதவை திறந்து பார்த்த போது உடல் கருகிய நிலையில் நபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த பொலிசார் அந்த கருகிய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பொலிஸ் விசாரணையில், காரில் உடல் கருகி பிணமாக மீட்கப்பட்டவர் சதாரா மாவட்டத்தை சேர்ந்த அஜித் இங்கலே (25) என்பது தெரியவந்துள்ளது.
இவரும் சதாரா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் சமீபத்தில் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தால் அவர்கள் தனது மகளுக்கு அவசர அவசரமாக வேறு ஒருவருடன் கடந்த மாதம் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அஜித் இங்கலே, நேற்று முன்தினம் தனது ஊரில் இருந்து கார் மூலம் தனது முன்னாள் காதலி வசித்து வரும் பகுதிக்கு சென்றுள்ளார்.தனது முன்னாள் காதலியின் வீட்டின் முன் உள்ள சாலையில் காரை நிறுத்திய அவர், காரில் இருந்தபடியே முன்னாள் காதலியை செல்போனில் தொடர்புகொண்டு தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
பின்னர் தான் தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி காருக்குள்ளேயே தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





