
கடினமான, மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்காக வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.அதன்படி நாட்டில் 4471 பாடசாலைகளுக்கு மேலதிக சீருடைகள் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் வழங்குனர்களால் வழங்கப்பட்ட தரமற்ற புடவைகளுக்கு பதிலாக பெற்றுக் கொள்ளப்பட்ட புடவைகள் இந்த வேலைத் திட்டத்திற்காக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.சுமார் 12 இலட்சம் சீருடைகள் கல்வியமைச்சின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி படசாலைகளின் இரண்டாவது தவணைக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாக மாணவர்களுக்கு மேலதிக சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.





