சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்” முதற்கட்டமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக வவுனியா சிதம்பரபுரம் வைத்தியசாலைக்கும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 08.04.2016 அன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு தேவையான சத்திர சிகிச்சைப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில், வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திரு கந்தையா சிவநேசன் (பவன்) கலந்து கொண்டு சத்திர சிகிச்சைப் பொருட்களை முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் கையளித்தார்.
இன் நிகழ்வில் வைத்திய கலாநிதி திரு எஸ்.மணிவண்ணன், வன்னி மேம்பாட்டு பேரவைத் தலைவர் தவராசா, தமிழ்த் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் ஸ்ரீ.கேசவன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் எஸ்.கஜூரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.





