சர்வதேச கிரிக்கெட் சபையின் T20 தரப்படுத்தலில் இலங்கை அணி தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகிறது.
தென் ஆப்ரிக்காவிற்கெதிரான நேற்றைய 3வதும், இறுதியுமான T20 சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்றே இலங்கை அணி தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நேற்றைய போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருக்குமாயின் இலங்கை அணி 3வது இடத்திற்குப் பின்தள்ளப்பட்டிருக்கும் என்பதோடு T20 சர்வதேசப் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த முதலாவது டெஸ்ட் அந்தஸ்துள்ள நாடு என்ற மோசமான சாதனைக்கும் சொந்தமாகியிருக்கும்.
எனினும் நேற்றைய போட்டியில் இலங்கை அணி திலகரட்ண டில்ஷான், திசார பெரேரா, மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் வெற்றிபெற்றதால் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
நேற்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றதன் காரணமாக பாகிஸ்தான் அணி முதலிடத்திற்கு வரும் வாய்ப்புக் கிடைக்காமல் போனதோடு அவ்வணி தொடர்ந்தும் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.