துர்முகி புதுவருட சுப நேரங்கள்!!

377

NEW

பிறகின்ற துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என வவுனியா நெற் இணையம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம்.

மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். அறுபது வருட சுழற்சியில் 30ஆவது வருடமான துர்முகி வருடம் 13.04.2016 அன்று மாலை மலரவிருக்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இன்று 13ம் திகதி இரவு 6.36 மணிக்கு புதுவருடம் பிறக்கிறது. இன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி தொடக்கம் இரவு 10.30 மணிவரை புண்ணிய காலமாகும்.

சிரசில் கடப்பம் இலையும் காலில் வேப்பம் இலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட வேண்டும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

திருக்கணித பஞ்சாங்கமோ இன்று 13ஆம் திகதி இரவு 7.48 மணிக்கு பிறப்பதாக கணித்துள்ளது. அன்று பிற்பகல் 3.48 மணி தொடக்கம் இரவு 11.48 மணிவரை புண்ணிய காலமாகும். சிரசுக்கு வேப்பம் இலையும் காலுக்கு கொன்றை இலையும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் வரை உள்ள காலப்பகுதியே ஓர் தமிழ்- வருஷமாகும்.