நண்பனின் மகள் மணக்க மறுத்ததால் அவர் மீது அசிட் ஊற்றிய 50 வயது கொடூரன்!!

747

acid

இந்திய உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த நண்பனின் மகள் மீது அசிட் வீசியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு நரைன் ஷிவ்புரி(50).

மில் கொலனியில் வசிக்கும் அவருக்கு மறைந்த தனது நண்பரின் 24 வயது மகளை திருமணம் செய்துகொள்ள ஆசை ஏற்பட்டுள்ளது. மகள் வயதில் உள்ள பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் தொந்தரவு செய்து வந்துள்ளார்.

அப்பாவின் நண்பர் இப்படி தன்னிடம் கேட்டதால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவரை மணக்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு அப்பெண் மீது நேற்று அசிட் ஊற்றினார்.

அவர் அசிட் ஊற்றியபோது அப்பெண் நல்லவேளையாக விலகிவிட்டதால் அவருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.