மலேசிய விமானத்தில் பறவை மோதியது!கட்டுநாயக்காவில் சம்பவம்!

693

 

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் பறவையொன்று மோதியுள்ளது.

மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே பறவை மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.L.C.நிமல்சிறி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தினால் விமானத்திற்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

விமானத்தைத் தரையிறக்குவதற்கு தயாரான போது சுமார் 50 மீற்றர் உயரத்தில் பறவை விமானத்தின் முற்பகுதியில் மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விமானத்தைத் திருத்துவதற்குத் தேவையான உதிரிப் பாகங்களை தருவிப்பதற்கு விமான சேவை நிறுவனம் ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.