திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்து திரும்பிய மனிதன்!!

301

16067whale1

ஸ்பெய்னைச் சேர்ந்த நபர் ஒருவர், திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் தான் 3 தினங்கள் சிக்கியிருந்த பின்னர் உயிர் தப்பியுள்ளதாக கூறுகிறார். ஆனால், இவர் கூறுவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்பது தெரியவில்லை. 56 வயதான லூஜி மார்குவெஸ் எனும் இவர், ஒரு மீனவராவார். அண்மையில் இவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார். புயல் காரணமாக அவரின் படகு கவிழ்ந்தது.

ஸ்பானிய கரையோர காவல் படையிரனால் லூஜியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்பட்டது. ஆனால், ஆச்சரியகரமாக, சில தினங்களின் பின் லூஜி மார்குவெஸ் மீண்டும் வீடு திரும்பினார்.தான் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் 3 தினங்கள் இருந்து உயிர் பிழைத்ததாக அவர் தெரிவித்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புயலில் தனது படகு கவிழ்ந்த பின்னர் இராட்சத திமிங்கிலம் ஒன்றினால் தான் விழுங்கப்பட்டதாக லூஜி மார்குவெஸ் தெரிவித்தார். “திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் கடும் இருளாக இருந்தது.

அனைத்தும் கறுப்பாகத் தெரிந்தன. நீர் புகாத எனது கைக்கடிகாரத்தின் ஒளி மூலம் திமிங்கிலத்தின் வயிற்றில் இருந்த சிறிய மீன்களை இனங்கண்டு அவற்றை பச்சையாக உட்கொண்டு நான் உயிர்பிழைத்தேன்.இறுதியில் திமிங்கிலம் என்னை வெளித்தள்ளியது” என அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது கணவர் உயிர்ப்பிழைத்தமை ஓர் அற்புத நிகழ்வு என லூஜி மார்க்குவெஸின் மனைவி பெனலொப் தெரிவித்துள்ளார்.

ஆனால், லூஜி மார்குவெஸின் கூறும் விடயங்களுக்கு ஆதாரங்கள் இல்லாததால் வெறும் கட்டுக்கதையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. எவ்வாறெனினும், திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்ட ஒருவர் உயிர்ப்பிழைத்தாகக் கூறப்படும் முதல் சம்பவம் இதுவல்ல.1890களின் இறுதியில் முற்பகுதியில், ஆர்ஜென்டீனாவுக்கு அருகிலுள்ள பாக்லாந்து தீவுகளுக்கு அருகில் திமிங்கில வேட்டையில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் பார்ட்லி என்பவர் திமிங்கிலத்தினால் விழுங்கப்பட்டு 18 மணித்தியாலங்கள் அதன் வயிற்றுக்குள் இருந்து உயிர்தப்பியதாக ஒரு கதை உள்ளது.

அத் திமிங்கிலம் மலச்சிக்கலினால் இறந்த நிலையில், ஜேம்ஸ் பார்ட்லி அதன் வயிற்றுக்குள் இருப்பதை திமிங்க வேட்டைக்காரர்கள் அறியாத நிலையில் அத் திமிங்கிலத்தை வெட்டியபோது ஜேம்ஸ் பார்ட்லி உயிர்தப்பியதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட வரலாற்றாய்வாளரான எட்வர்ட் டேவிஸ், மேற்படி கதைக்கு ஆதாரம் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.