
நாட்டில் தற்போது நிலவிவரும் இடியுடன் கூடிய மழை காரணமாக மின்னல் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மின்னலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் பல பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.





